கல்கி சாமியார் மற்றும் அவரது மகன் மீது அமலாக்க துறை வழக்குப் பதிவு

ஆந்திர மாநிலத்தில் அமைந்திருக்கக் கூடிய கல்கி பகவான் ஆசிரமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின்போது 40 கோடி ரூபாய் ரொக்கம், 10 கோடி ரூபாய் வெளிநாட்டு பணம், கரன்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் அடிப்படைகள் வருமான வரித்துறை எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது என்பது தொடர்பான அறிக்கையாக கொடுத்த நிலையில், தற்போது அமலாக்கத் துறையினர் இந்த அறிக்கை அடிப்படையில் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

கல்கி சாமியார் மற்றும் அவரது குடும்பத்திற்கு எதிராக அமலாக்கத்துறை தங்களது விசாரணையை ஆரம்பித்திருக்கிறார்கள்.

குறிப்பாக வருமான வரித்துறை சோதனையின்போது கல்கி சாமியார் மற்றும் அவரது குடும்பத்தினர், ஹவாலா மூலம் 100 கோடி ரூபாய் வரைக்கும் வெளிநாட்டில் முதலீடு செய்து இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாது அவரது வீடுகளில் இருந்து கணக்கில் வராத 20 கோடி ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த இரண்டு விவகாரமும் குறித்து ஒரு விரிவான அறிக்கையை வருமானவரித்துறை அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

அதன் அடிப்படையில் தற்போது அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் வழக்கை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி இருக்கிறார்கள்.

அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

அதாவது முறையான அனுமதியின்றி வெளிநாடுகளில் பண பரிவர்த்தனை செய்வது, சொத்துக்களை வாங்குவது, தொழில்களில் முதலீடு செய்வது ஆகியவை குறித்து விசாரணை நடத்த இந்த சட்டம் அதிகாரிகளுக்கு அதிகாரம் அளித்துள்ளது.

அதன் அடிப்படையில்தான் இந்த சோதனை என்பது தற்பொழுது தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த சட்டம் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவும் அமலாக்கத்துறைக்கு அதிகாரத்தை கொடுத்திருக்கிறது.

எனவே கல்கி சாமியார் மற்றும் அவரது மகன் உள்ளிட்டோர் கைது செய்யப்படுவார்களா?? என்ற கேள்வி தற்போது எழுந்திருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் தற்போது இந்த அமெரிக்க டாலர் எங்கிருந்து வந்தது என்பது குறித்து ஒரு கணக்காளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்னும் சிலர் இதில் சிக்கக் கூடும் என்ற தகவலும் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே தற்போது கல்கி சாமியார் மற்றும் அவரது குடும்பத்திற்கு எதிராக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள்.

கைது செய்யப்பட வாய்ப்பு அதிகமாகவே உள்ளது என்பதுதான் தற்போதைய தகவல்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே