கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை – விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் கடிதம்..!!

கலப்புத் திருமணம் செய்துகொண்டோருக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

விழுப்புரம் எம்பி ரவிகுமார் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் அரசு பணிக்கு நியமனம் செய்யும்போது முன்னுரிமை தரப்பட வேண்டியவர்களின் பட்டியலில் கலப்பு திருமணம் செய்துகொண்டவர்களையும் சேர்த்து தமிழக அரசு 1986 ஆம் ஆண்டு ஆணையிட்டுள்ளது. 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை அன்றைய திமுக ஆட்சியின் போது தமிழக அரசின் இடைநிலை ஆசிரியர் பணி நியமனங்களில் கலப்புத் திருமணம் செய்துகொண்டு 287 பேர் பணி நியமனம் பெற்றுள்ளனர்.

ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக கலப்புத் திருமணம் செய்து கொண்ட எவரும் ஆசிரியர் பணி நியமனம் செய்யப்படவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தை கடந்த அதிமுக அரசு செயல்படுத்தவில்லை. தங்களது தலைமையிலான அரசு இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உரிய ஆணை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே