பெண்களுக்கு தற்காப்பு கலை மிக அவசியம் : தமிழிசை

பெண்களிடம் அழுக்கு மனதோடு அணுக நினைப்பவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்ள களரி போன்ற தற்காப்பு கலை மிக அவசியம் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பள்ளி மாணவ மாணவிகளுக்கு விருதுகளை வழங்கினார்.  

தொடர்ந்து மேடையில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், மாணவர்களின் அறிவுத்திறன், அவர்களே கேள்வி கேட்கும் அளவிற்கு வளர்ந்து இருப்பதாக கூறினார்.

தேர்வை பார்த்து மாணவர்கள் பயப்பட வேண்டியதில்லை என்றும்; பெற்றோர் ஆரோக்கியமான உணவுகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

தற்காப்பு கலை பெண்களுக்கு மிக மிக அவசியம் என்றும் தமிழிசை கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே