காதல் என்றால் என்ன.. நிறையப் பேருக்கு அது சரிவரப் புரிவதில்லை.. அது மனசை ஆக்கிரமிப்பதா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. அது இல்லைங்க.. உண்மையில் காதல் என்பது என்ன தெரியுமா.. மனங்களின் அரவணைப்பு.

ஒருவர் மனதை இன்னொருவர் அன்பால் அரவணைப்பது.. ஒத்த சிந்தனையால் அரவணைப்பது.. உள்ளூர ஆதரித்து அரவணைப்பது.. இதுதாங்க காதல்..

காதலுக்கு இலக்கணமோ, எல்லையோ கிடையாது.. இது எல்லையில்லா ஏகாந்தப் பெருவெளி.. எப்படி வானத்தை நம்மால் எங்கிருக்கிறது என்று சுட்டிக் காட்ட முடியாதோ..

அது போலத்தான் காதலும்.. இதுதான் காதலின் உச்சம் என்று எதையுமே நம்மால் சொல்ல முடியாது.

போகப் போக போய்க் கொண்டே இருக்கும்.. அது ஒரு சொல்லவியலாத அனுபவம்.. அனுபவித்துப் பார்த்தால்தான் காதலின் உன்னதம் புரியும், தெரியும்.

மனதால் ஒருவரைக் கட்டியணைப்பது தான் காதல். அன்பால் அரவணைப்பதே காதல். எண்ணங்கள் ஒன்றிணைந்து இதயங்கள் பரிமாறுவதே காதல்.

காதலுக்கு மொழி தேவையில்லை கண்களால் காதலை வெளிப்படுத்தலாம். ஒருவர் மீது மற்றவர் செலுத்தும் அன்பே காதல். ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ பார்த்தவுடன் நம் மனதில் தோன்றும் இவள் அல்லது இவன் எனக்கு வாழ்க்கைத்துணையாக வந்தால் நன்றாக இருக்கும் என்று. ஏதோ ஒரு செயல் இருவருக்கும் ஒன்றாக இருக்கும்.

உன்னிடம் எனக்கு இந்த விஷயம் பிடித்திருக்கிறது என்று ஆரம்பிக்கும் காதல் நீ இல்லாமல் என் உயிர் இல்லை என்று ஒரு கட்டத்தில் சொல்ல வைக்கிறது.

அன்பால் அரவணைத்து உள்ளத்தில் இருக்கும் காதலை வெளிப்படுத்துங்கள். தூய்மையான அன்பின் வெளிப்பாடு தான் காதல். இந்த அரவணைப்பில் உண்மையான பாசம் இருக்கும்.

தன் துணையை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

அன்பால் அரவணையுங்கள். காதல் உள்ளங்களின் பரிமாற்றம் அது ஆக்கிரமிப்பு அல்ல அரவணைப்பு மட்டுமே.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே