‘நாய் சேகர்’ நகைச்சுவை படத்தில் நாயகனாக நடிக்கும் வடிவேலு

கரோனா காலகட்டத்தில் இயக்குநர் சுராஜும், வடிவேலு வும் இணைந்து ஒரு நீண்ட காமெடி கதை குறித்து விவாதித்துள்ளனர். அந்த கதை இப்போது படமாகிறது. ‘தலைநகரம்’ படத்தில் வடிவேலு கதாபாத்திரத்தின் பெயரான ‘நாய் சேகர்’ என்பதையே இப்படத்துக்கு பெயராக வைத்துள்ளனர். இதை சுராஜ் இயக்க உள்ளார். வடிவேலு நீண்ட காலத்துக்கு பிறகு, இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வடிவேலு ஏப்ரல் 14-ம் தேதி வெளியிட உள்ளார். படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்குகிறது. சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடக்க உள்ளது.

இதற்கிடையே, வடிவேலு – சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்க இருந்த படத்தின் பிரச்சினையால் தயாரிப்பாளர்கள் சங்கம் வடிவேலுவுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதுவும் தற்போது முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ‘நாய் சேகர்’ உட்பட அடுத்தடுத்து பல படங்களில் வடிவேலு நடிக்க உள்ளதாக அவரது தரப்பில் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே