இங்கிலாந்து வீரர்களுக்கே ஆட்ட நாயகன், தொடர் நாயன் விருதா? ஏன் ஷர்துல் தாக்கூர், புவனேஷ்வர் குமார் உங்கள் கண்களில் படவில்லையா?- விராட் கோலி அதிருப்தி..

நேற்று இந்தியா தொடரை வென்ற 3வது ஒருநாள் போட்டியில் புனேயில் ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளையும் பேட்டிங்கில் 3 சிக்சர்களுடன் 21 பந்துகளில் 30 ரன்களையும் விளாசி இந்திய வெற்றியைத் தீர்மானித்தவர்களில் ஒருவராக திகழ்ந்தார், ஆனால் ஆட்ட நாயகன் விருது இவருக்கு வழங்கப்படவில்லை சாம் கரன் தட்டிச் சென்றார்.

நேற்று இந்தியா தொடரை வென்ற 3வது ஒருநாள் போட்டியில் புனேயில் ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளையும் பேட்டிங்கில் 3 சிக்சர்களுடன் 21 பந்துகளில் 30 ரன்களையும் விளாசி இந்திய வெற்றியைத் தீர்மானித்தவர்களில் ஒருவராக திகழ்ந்தார், ஆனால் ஆட்ட நாயகன் விருது இவருக்கு வழங்கப்படவில்லை சாம் கரன் தட்டிச் சென்றார்.

ஷர்துல் பேட்டிங்கில் அசத்தல் என்னவெனில் குத்திய ஜோருக்கு ஹுக் ஷாட்டில் 2 சிக்சர்களை விளாசினார், பிறகு இறங்கி வந்து பென் ஸ்டோக்சை நேராக ஒரு சிக்சர் விளாசினார், அனைத்தையும் விட லஷ்மண், திராவிட், சேவாக் பாணி தரையோடு தரையாக ஒரு ஆன் ட்ரைவ் ஆடினாரே பார்க்கலாம், அற்புதமான ஷாட்கள்.

அதே போல் அல்ட்ரா மாடர்ன் அதிரடிக்கு எதிராக புவனேஷ்வர் குமார் தொடர் முழுதும் அட்டகாசமாக ஸ்விங் பவுலிங் செய்தார், அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கவில்லை மாறாக ஜானி பேர்ஸ்டோவுக்கு வழங்கப்பட்டது. இந்த இரண்டு ஒழிப்புகளும் விராட் கோலியை அதிருப்திக்கு உள்ளாக்கியது.

இந்தியா நேற்று 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றி டெஸ்ட், டி20, ஒருநாள் தொடர் என்று அனைத்தையும் கைப்பற்றி இங்கிலாந்துக்கு ஆப்படித்தது.

இந்நிலையில் ஆட்டம் முடிந்து விராட் கோலி கூறியதாவது:

தாக்கூர் ஆட்ட நாயகன் விருது பெறவில்லை என்பது எனக்கு ஆச்சரியமளிக்கிறது. 4 விக்கெட்டுகள், 30 ரன்கள். அதே போல் புவனேஷ்வர் குமார் தொடர் நாயகன் விருதுப் போட்டியில் முக்கியமாகத் திகழ்ந்தார். அவருக்கும் வழங்கப்படவில்லை.

இந்த இருவரும்தான் நடு ஓவர்கள் மற்றும் பவர் ப்ளேயில் வித்தியாசத்தை ஏற்படுத்தியவர்கள், வெற்றிக்கு வழிவகுத்தவர்கள். பிரசித், குருணால் பரவாயில்லை, ஆனால் மிகவும் திருப்தி அடைந்தது பேட்டிங்கில் இவ்வளவு தூரம் கடைசி வரை ஆட முடியும் என்பதே.

இன்னும் உற்சாக கிரிக்கெட் காலம் காத்திருக்கிறது. மிகவும் பிரமாதமான இந்தத் தொடரில் நாங்கள் உச்சத்தில் முடிய வேண்டும் என்று ஆடினோம். இந்த தொடர் இனிமையாக இருந்தது. ஒவ்வொரு தொடரையும் வெல்வது மகிழ்ச்சியளிக்கிறது.

இதன் பிறகு ஐபிஎல் தொடரை மகிழ்வுடன் ஆடிவிட்டு மீண்டும் இதே இந்திய வீரர்களுடன் சேர்வதை எதிர்நோக்குகிறேன்.

தொடர்களை நெருக்கமாகப் போடக்கூடாது. பணிச்சுமை குறைக்கப்பட வேண்டும், இதை நிச்சயம் விவாதித்து நல்ல முடிவு எடுப்பார்கள் என்று கருதுகிறேன்.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே