சிங்கமுத்து மற்றும் மனோபாலா மீது புகார் கொடுத்த வடிவேலு!

நடிகர் வடிவேலு கடந்த பத்து வருடங்களாக சினிமாவில் பெரிதாக ஏதும் செய்யவில்லை. கிட்டத்தட்ட பீல்டு அவுட்டாகி விட்டார். இந்நிலையில் தனது பெயரை கெடுக்கும் வகையில் பேசியதாக நடிகர்களான சிங்கமுத்து மற்றும் மனோபாலா ஆகியோர் மீது புகார் கொடுத்துள்ளார் வடிவேலு.

இந்த பிரச்சனை புதிதல்ல. கடந்த பல வருடங்களாக சிங்கமுத்து மற்றும் வடிவேலு ஆகியோருக்கு இடையில் பனிப்போர் போன்று பிரச்சனை நடைபெற்று வருகிறது. வடிவேலுவை தான்தான் ஆளாக்கி விட்டதாக சிங்கமுத்து அடிக்கடி தெரிவித்து வருகிறார்,

இதற்கு பதிலடியாக வடிவேலு அவர் எல்லாம் எனக்கு ஏதும் செய்யவில்லை என்னை கடனாளிதான் ஆக்கி விட்டார் என்றும் அவ்வப்போது கூறிவருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் தனது பெயரை கெடுக்கும் விதமாக பேசி வரும் சிங்கமுத்து மற்றும் மனோபாலா ஆகியோர் மீது வடிவேலு புகார் கொடுத்துள்ளார்.

Related Tags :

vadivelu| singamuthu | manobala

Sri Mahat

ENJOY EVERY MOMENT..

Sri Mahat has 140 posts and counting. See all posts by Sri Mahat

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே