செல்லப்பிராணி நாய்க்கு கேக் வெட்டி கொண்டாட்டம்..; நெட்டிசன்கள் விளாசல்..!!

கடந்த 2013ம் ஆண்டு வெளியான “ஆப்பிள் பெண்ணே”என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா மேனன்.

அதனை அடுத்து சித்தார்த்தின் “தீயா வேலை செய்யணும் குமாரு” என்கிற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவருடைய கவனத்தையும் பெற்றார்.

ஆனால் இவரது திரை வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது “தமிழ் படம் 2”.எதிர்பார்த்ததை விட மாபெரும் ஹிட்டடித்த இந்த படம் வேற லெவலுக்கு எடுத்து சென்றது.

அதன் பிறகு நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி உடன் இணைந்து “நான் சிரித்தால்” என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

தற்போது பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஐஸ்வர்யா மேனன் அவ்வப்போது வித விதமான கவர்ச்சி போட்டோ சூட் களை நடத்தி அவருடைய இணையதள பக்கங்களில் பதிவேற்றி ரசிகர்களை குஷி செய்து வருவார்.

இந்நிலையில் தற்போது தன்னுடைய செல்லப்பிராணி நாய்க்கு கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

அதனை போட்டோ எடுத்து அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பலரிடம் பாராட்டை பெற்றுள்ளார்.

இதற்கு பதில் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்பட்டு 2 பேருக்கு உணவு வாங்கி கொடுக்கலாம் என்றும் பணம் இருந்தால் இப்படியெல்லாம் வருமா? என்று நிறைய இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே