கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சரித் உட்பட 20 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
நாட்டையே உலுக்கிய கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சரித் உட்பட 20 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்த குற்றப்பத்திரிகையில் சரித் பெயர் முதலாவது இடத்திலும், ஸ்வப்னா சுரேஷ் பெயர் இரண்டாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளது.
கேரள அரசியலில் பெரும் பூகம்பத்தை கிளப்பிய தங்கக்கடத்தல் விவகாரத்தில், பல்வேறு அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கும் என்ற சந்தேகம் எழுந்தது.
இதனால் இவ்வழக்கை என்.ஐ.ஏ தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.