செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து உபரிநீர் திறப்பு..!!

செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கனமழையால் பூண்டி ஏரிக்கு வரும் 3,240 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

நீர்மட்டம் 21 அடியை எட்டியதை தொடர்ந்து, புழல் ஏரியில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டது.

இதனால், கரையோரம் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பொன்னையா அறிவுறுத்தியுள்ளார்.

புழல் ஏரியில் இருந்து இன்று(ஜன.,5) பிற்பகல் 1 மணிக்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது .

மேலும் நீர் வரத்துக்கு ஏற்ப, ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் படிப்படியாக அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது. 

இதனால், புயல் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர், சுற்றியுள்ள கிராமங்களான நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்ட் லை, புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம் வழியாக செல்லும்.

எனவே கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட கலெக்டர் பொன்னையா அறிவுறுத்தியுள்ளார்.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்தும் இன்று பிற்பகல் 2 மணிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டது.. பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 1900 கன அடியில் இருந்து 3,240 கன அடியாக அதிகரித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே