மகாத்மாவின் தபால் தலைகளை வெளியிட்ட உஸ்பெகிஸ்தான், துருக்கி நாடுகள்

மகாத்மா காந்தியின் 150 பிறந்த தினத்தை ஒட்டி, அவரது தியாகத்தை போற்றும் விதமாக உஸ்பெகிஸ்தான் மற்றும் துருக்கி நாடுகள் காந்தியின் தபால் தலைகளை வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் தேச தந்தை என அன்புடன் அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் 150வது தினம், இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இனவெறிக்கு எதிராக போராடிய காந்தியின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், உஸ்பெகிஸ்தான் அரசு, 52மில்லிமீட்டர் நீளம் மற்றும் 37 மிமீ அகலமும் கொண்ட காந்தியின் புகைப்படத்துடன் கூடிய தபால்தலையை வெளியிட்டுள்ளது.

இதேபோல், துருக்கி நாட்டிலும் காந்திக்கு 100மி.மீ நீளம் மற்றும் 90மி.மீ அகலமும் கொண்ட போஸ்டல் பிளாக் வெளியிடப்பட்டுள்ளது.

அந்நாட்டின் தபால்துறை மற்றும் தகவல் தொடர்புதுறை இணைந்து வெளியிட்ட இந்த பிளாக்கின் ஒரு பகுதியில் இந்தியாவின் நினைவுச்சின்னங்களும் இடம்பெற்றுள்ளன.

இனவெறி, பாகுபாடு ஒழிப்பு, வறுமை ஒழிப்பு, அனைவரும் சமம் என்ற நிலைப்பாட்டை உருவாக்க, காந்தி தனது வாழ்நாளை அர்ப்பணித்ததன் நினைவாக, துருக்கி தபால் துறை இந்த போஸ்டல் பிளாக்கை வெளியிட்டுள்ளது.

மத்திய ஆசிய பிராந்தியத்தில் நினைவு தபால் தலைகள் வெளியிடப்பட்டது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே