பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் ஒப்புதல்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு அந்நாட்டு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்சிட் ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில், கடந்த சில மாதங்களாக இழுபறி நிலவியதால், 650 தொகுதிகளுக்கும் அண்மையில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது.

இதில் கன்சர்வேட்டிவ் கட்சி அதிகப் பெரும்பான்மையுடன் 337 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியமைத்ததால் பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் தக்கவைத்துக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து பிரெக்சிட் ஒப்பந்தத்தில் சிறு மாற்றங்களை செய்து அந்நாட்டு நாடாளுமன்றத்தின் காமன்ஸ் எனப்படும் மக்களவையில் நேற்று போரிஸ் ஜான்சன் தாக்கல் செய்தார்.

பின்னர் அதன் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.

ஒப்பந்தத்துக்கு ஆதரவாக 358 பேரும், எதிராக 234 பேரும் வாக்களித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது போரிஸ் ஜான்சன் தரப்புக்கு வெற்றியாக கருதப்படுகிறது.

பிரிட்டன் மக்களவையில் பிரெக்சிட் உடன்படிக்கை நிறைவேறிய நிலையில், அந்நாட்டு பிரபுக்கள் சபை எனப்படும் மேலவையில் ஜனவரி 31-ம் தேதிக்குள் வாக்கெடுப்பு நடத்தி முடிக்கவேண்டும.

அதில் ஒப்புதல் கிடைத்துவிட்டால், ஜனவரி 31-ம் தேதியே ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரெட்டன் விலகிவிடும்.

அவ்வாறு மேலவையில் பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேறினால் 11 மாதங்கள் வரை வர்த்தக பேச்சுவார்த்தைகளை ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடரலாம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே