காலாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின் பள்ளிகள் இன்று திறப்பு.

காலாண்டுத் தேர்வுக்கான விடுமுறை நேற்றுடன் முடிந்ததை அடுத்து பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன.

அரசுப் பள்ளிகளில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் படிப்போருக்கு பருவத் தேர்வுகளும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வுகளும் செப்டம்பர் 12ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை நடைபெற்றது.

9 நாட்கள் விடுமுறைக்குப் பின் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன.

இந்நிலையில், மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்துக்கான சுமார் 2 கோடி பாடபுத்தகங்கள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பும் பணி நிறைவடைந்தது.

உயர்வகுப்புகளை பொறுத்தவரையில் பிளஸ் 2 வகுப்புக்குரிய பாடப்புத்தகங்கள் இரண்டு பாகங்களாக அச்சிடப்பட்டதால், இரண்டாம் பாகம் இன்று வினியோகப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல, சீருடைகள், நோட்டுபுத்தகங்கள், உள்ளிட்ட இலவச பொருட்களும் இன்று வழங்கப்பட உள்ளன. பள்ளி திறக்கும் இன்று அனைத்து மாணவர்கள் கையிலும் பாடப்புத்தகம் இருக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே