முகத்தழும்புகள் நீங்க பயனுள்ள டிப்ஸ்..!!

அகத்தின் அழகை முகமே வெளிக்காட்டும் என்றாலும், தழும்புகளும் பருக்களும் அதற்கு தடையாக இருக்கும் என்ற குறை பலருக்கும் உண்டு.

ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள தழும்புகள், பருக்களை இயற்கையான முறையில் போக்க வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்!

நமது வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே அழகை பராமரிக்கலாம் என்பதற்கு உதாரணம் நமது குடும்பத்திலேயே இருப்பார்கள். நமது பாட்டியின் கைவைத்தியத்தைக் கேட்டு, பின்பற்றினாலே ஆரோக்கியத்தையும் அழகையும் நன்கு பராமரிக்கலாம்.

நமது முகத்தில் உள்ள அசிங்கமான கரும்புள்ளிகள், பருக்கள் மற்றும் தழும்புகளை மறைக்க உதவும் சில எளிய இயற்கை வழிகளில் சருமத்தைப் பராமரித்தால், பல வருடங்கள் சருமம் அழகாகவும், இளமையுடனும் இருக்கும். பெர்ரி பழ வகைகள் முகத்திற்கு பொலிவு கொடுப்பவை. அவற்றை உண்பது ஆரோக்கியத்திற்கு நன்மை என்றால், அதை சருமத்தில் பயன்படுத்தினால் முகப்பொலிவு பிரகாசிக்கும்.

கிரான்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழ வகைகளில் ஏதேனும் ஒரு பழத்தைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவில் தண்ணீரை சேர்த்து கலவையாக்கி முகத்தில் தடவி சிறிது நேரம் தேய்த்துவிட்டு கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, முகம் பொலிவு பெறும்(Beauty Tips), அழகு மிளிரும்.

பலவிதங்களில் பயன் தரும் எலுமிச்சை சாறு மற்றும் தயிரை சரிசம அளவில் எடுத்து, ஒன்றாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் காயவிடவும். பிறகு முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி செய்வதாலும் சருமத்தில் உள்ள தழும்புகளும், பருக்களும் அகலும்.

ஆரோக்கியத்திற்கு அருமருந்தான பூண்டில் உள்ள உட்பொருட்கள், சருமத்தில் உள்ள கறைகளை எளிதில் போக்க வல்லது. ஒரு பூண்டு பல்லை இரண்டாக வெட்டி, அதனை முகத்தில் தேய்க்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3 முறை செய்து வந்தால், முகத்தில் இருக்கும் கறைகள் மங்கும்.

அதே போல், ஜிங்க் மற்றும் செலினியம் குறைபாடு சருமத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே உலர் பழங்கள், பால், சோளம், பருப்பு வகைகள், மீன், ஈரல், எள்ளு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். இவற்றில் உள்ள சத்துக்கள் உடலுக்கு மட்டுமல்ல சரும ஆரோக்கியத்தையும் அழகையும் பாதுகாக்கும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே