இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மற்றும் எடை இழப்பைக் கட்டுப்படுத்த பிளாக் டீ உதவுகிறது.

பிளாக் டீ குடலில் உள்ள நுண்ணுயிரியின் உதவியுடன், நல்ல உடல் ஆரோக்கியம் மற்றும் எடை இழப்பிற்கும் பங்களிக்கும்.

பிளாக் டீயில் கலோரிகள் மிகவும் குறைவு. ஒரு கோப்பை பிளாக் டீயில் 2 கிராம் கலோரிகள் மட்டுமே உள்ளன. மேலும் உள்ளுறுப்புகளில் தேங்கும் கொழுப்புகளைத் தடுக்க உதவுகிறது.

உங்கள் எடை இழப்புக்கா டயட் உணவில் பிளாக் டீயை சேர்த்துக் கொள்ள விரும்பினால் சர்க்கரை அல்லது பிற பொருட்களை சேர்க்க கூடாது. பால் மற்றும் சர்க்கரை சேர்க்காத பிளாக் டீ உங்களின் உடல் எடையைக் குறைக்கச் செய்யும்.

பிளாக் டீயில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்கும். மேலும் பெல்லி பேட் எனப்படும் தொப்பையில் உள்ள கொழுப்புகள் குறையும்.

இளம் சூடான பதத்தில் பிளாக் டீ அருந்தி வந்தால் கடுமையான வயிற்று போக்கு ஏற்படுவது நிற்கும். வயிற்று போக்கு ஏற்பட்ட சமயத்தில் உடல் இழந்த சக்திகளை மீண்டும் பெற உதவும். செரிமான உறுப்புகளின் செயல்பாட்டை பழைய நிலைக்கு கொண்டுவரும்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும் அல்லது அந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் சிறந்த ஒரு பானமாக பிளாக் டீ இருக்கிறது.

கடுமையான மலச்சிக்கலால் அவதிபடுபவர்கள் தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் பிளாக் டீ தொடர்ந்து அருந்தி வந்தால் தினமும் மலம்கழிக்கும் நிலை உண்டாகி மலச்சிக்கல் தீரும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே