அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை

2021ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு என்பது யாரொருவர் நாடுகளினிடையே சகோதரத்துவத்தை வளர்க்க சிறந்த முயற்சி எடுப்பவரோ, நிலவும் இராணுவத்தினை நீக்கவோ அல்லது குறைக்கவோ முயற்சி எடுத்தவரோ, அமைதி மாநாடுகள் நிகழ காரணமாக இருக்கிறாரோ, அவருக்குக் கொடுக்கப்பட வேண்டும்.

அதன்படி 2021ஆம் ஆண்டு,அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-க்கு வழங்க நார்வே நாடாளுமன்றம் நோபல் பரிசு கமிட்டியிடம் பரிந்துரை செய்துள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இஸ்ரேல் இடையேயான உறவுகளை இயல்பாக்குவதற்கான அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதால் அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு 2009 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு இருந்தது.

சர்வதேச அரசியல் ராஜதந்திரம் மற்றும் மக்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்திய வகையில் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2759 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே