ஜப்பான் நாட்டில் இன்று அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 6.6 நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜப்பான் நாட்டில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.6 நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பானின் வானிலை ஆய்வு மைய தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் கிழக்கு கடற்கரைக்கு அருகிலுள்ள ஹொன்ஷூவில் காலை 6.57 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

இருப்பினும், இதுவரை எந்த வகையிலும் இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை ஏதும் தகவல் இல்லை. சுனாமி குறித்து வானிலை ஆய்வு துறை எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை. நாட்டின் வடகிழக்கில் மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே