உள்ளாட்சித் தேர்தலில் 93 ஊராட்சி ஒன்றிய ‌பதவிகளில் தேமுதிக வெற்றி

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளில் இரண்டு இடங்களையும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளில் 93 இடங்களிலும் வென்றுள்ளது.

அதிமுக கூட்டணியுடன் தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக கடலூர் மற்றும் தர்மபுரி ஆகிய இடங்களில் மாவட்ட கவுன்சிலர் பதவியில் தலா ஒரு இடத்தை பிடித்துள்ளது.

93 ஊராட்சி ஒன்றிய பதவிகளில் வெற்றி பெற்ற தேமுதிக அதிகபட்சமாக கடலூரில் 17 இடங்களையும், திருச்சியில் பத்து இடங்களையும், கிருஷ்ணகிரியில் ஒன்பது இடங்களிலும் வென்றுள்ளது.

தர்மபுரி மற்றும் திருவண்ணாமலையில் 7 இடங்களில் வெற்றி பெற்ற தேமுதிக அரியலூர், கோவை, சிவகங்கை, சேலம், திருப்பூர், திருவள்ளூர், தேனி, மதுரை ஆகிய இடங்களில் மூன்றிற்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி கண்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே