மகாராஷ்டிர சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு – தற்காலிக சபாநாயகர் கோலம்பகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மஹாராஷ்டிரா சட்டப்பேரவையில் புதிய எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்று கொண்டனர்.

மஹாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்‍கு கடந்த மாதம் 21-ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, 24-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்‍கப்பட்டன.

பல்வேறு அரசியல் குழப்பங்களால் ஒரு மாதத்திற்குப் பிறகு, எம்.எல்.ஏக்‍கள் இன்று பதவியேற்றுக்‍கொண்டனர்.

இன்று காலை 8.00 மணிக்‍கு தொடங்கிய சட்டப்பேரவை சிறப்புக்‍ கூட்டத்தில், புதிய எம்.எல்.ஏக்‍களுக்‍கு, தற்காலிக சபாநாயகர் காளிதாஸ் கோலம்பகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே