ஏப்ரல் 5ல் இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்கை அணையுங்கள் – பிரதமர் வேண்டுகோள்

ஏப்., 5 ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு, மெழுகுவர்த்தி, அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி வீடியோ மூலம் பேசியதாவது:

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் 9 நாட்களை நிறைவு செய்துள்ளோம்.

ஊரடங்கிற்கு மக்கள் தரும் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மதித்து நடப்பவர்களுக்கும் நன்றி.

அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவிற்கு எதிராக யுத்தம் நடத்தியதற்கு நன்றி தெரிவிக்கிறேன். மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள்.

கொரோனாவுக்கு எதிராக நாடே ஒன்றிணைந்து போராடும் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. இந்தியாவின் ஊரடங்கு உலகிற்கு முன்னுதாரணமாக திகழந்துள்ளது.

கொரோனாவுக்கு எதிராக போராடும் மக்கள் கடவுளின் வடிவம். வீடுகளில் இருக்கும் கோடிக்கணக்கான மக்களில், சிலருக்கு நாம் எப்படி கொரோனாவுக்கு எதிராக தனியாக போராட முடியும் என நினைக்கலாம்.

அது போன்ற கேள்வி அவர்களின் மனதில் எழும்?

ஆனால் ஒன்றை நினைவில் வைத்து கொள்ளுங்கள், யாரும் தனியாக இல்லை. 130 கோடி இந்தியர்களும் ஒன்றிணைந்துள்ளோம்.

கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களுக்கு மார்ச் 22 அன்று, மக்கள் செலுத்திய நன்றி, மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக ஆனதுடன், அதனை அந்நாடுகள் பின்பற்றுகின்றன.

மக்கள் ஊரடங்கு, மணியோசை எழுப்பியதன் மூலம், சவாலான நேரத்தில் நாடு ஒற்றுமையாக உள்ளதை உணர்த்தியது.

உலகிற்கே இந்தியா முன்மாதிரி கொரோனா வைரசை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வை நோக்கி நாம் செல்ல வேண்டும்.

கொரோனா வைரசை பரவலை கட்டுப்படுத்த ஒளிமயமான காலத்தை கொண்டு வர வேண்டும். நெருக்கடியான நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்தது பாராட்டத்தக்கது.

கொரோனாவை எதிர்கொள்வதில் உலகிற்கே இந்தியா முன்மாதிரியாக உள்ளது. சமூக இடைவெளியை மக்கள் விட்டு கொடுக்கக்கூடாது.

கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை மக்களின் ஏமாற்றத்தை போக்க வேண்டும்.வீட்டில் இருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.

கொரோனாவை எதிர்ப்பதில் நாடே ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறது. வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் கடவுளின் வடிவம்.

ஏப்ரல் 5ம் தேதி வீட்டில் உள்ள மின்சார விளக்குகளை அணைத்துவிட்டு 9 நிமிடங்கள், வீட்டின் நான்கு மூளைகளிலும் டார்ச், அகல் விளக்குகள், மொபைல் டார்ச் லைட், மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும்.

அப்போது அமைதியாக இருந்து நாட்டு மக்களை பற்றி சிந்திக்க வேண்டும் கொரோனாவால் மக்கள் இருண்ட நிலையில் இருந்து வெளிச்சத்திற்கு வருவதற்கு உதவி செய்ய வேண்டும்.

ஒரே நேரத்தில் ஒளியேற்றுவதன் மூலம் நாம் ஒற்றுமையாக இருப்போம் என காட்டுவோம்.

வெளியே வராமல் வீட்டு வாசல்அல்லது பால்கனியில் இருந்து மக்கள் ஒளியேற்றலாம்.

உற்சாகமாக இருந்து கொரோனாவை எதிர்த்து மக்கள் போரிட வேண்டும்.

உற்சாகத்தைவிட மிகச்சிறந்த சக்தி இல்லை. அனைவரும் உற்சாகமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே