கொரோனாவை சமாளிக்க இந்தியாவிற்கு உலக வங்கி நிதி… எவ்வளவு தெரியுமா..?

இந்தியாவிற்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை அவசரகால நிதியாக உலக வங்கி வழங்க உள்ளது.

உலகையே கடும் அச்சுறுத்தலில் வைத்துள்ள கொரோனாவிற்கு மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த இக்கட்டான சூழ்நிலைகளை சமாளிக்க சர்வதேச நாடுகளுக்கு உலக வங்கி நிதி ஒதுக்கி வருகிறது.

முதற்கட்டமாக 25 நாடுகளுக்கு மொத்தமாக 1.9 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளது.

அவற்றில் அதிகபட்சமாக இந்தியாவிற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை அதாவது இந்திய மதிப்பில் சுமார் 7 ஆயிரத்து 719 கோடியை உலக வங்கி ஒதுக்கியுள்ளது.

ஆய்வகச் சோதனைகள், பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல், தனிமைப்படுத்தும் அறைகள் உருவாக்குவது உள்ளிட்டவற்றுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே