துருக்கி நிலநடுக்கம் – உயிரிழப்பு அதிகரிப்பு..!!

துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ எட்டியது.

துருக்கியின் ஏகன் கடலோர நகரமான இஸ்மிரில் கடந்த வெள்ளிக்கிழமை 7.1 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கம் காரணமாக இஸ்மிர் நகரத்தை சுனாமியும் தாக்கியது. இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையோரமாக இருக்கும் இஸ்மிர் நகரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

நிலநடுக்கத்தில் அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இடிபாடுகளில் சிக்கி 1000-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும், பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளனா் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இடிபாடுகளுக்குள் 65 மணி நேரமாக சிக்கித் தவித்த 3 வயது குழந்தை இன்று பத்திரமாக மீட்கப்பட்டது. மேலும் இடிந்த கட்டித்தில் சிக்கிய பூனை ஒன்று 76 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே