தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற குலதெய்வ கோயிலில் கிராம மக்கள் சிறப்பு வழிபாடு..!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடும் கமலா ஹாரீஸ் வெற்றி பெற வேண்டி, அவரது பூர்வீக ஊரில் குல தெய்வ கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் பைங்காடு பகுதியை அடுத்த துளசேந்திரபுரம் என்ற கிராமத்தில் உள்ள தர்மசாஸ்தா கோவிலில், கமலா ஹாரீஸின் உறவினர்கள், சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த சிறப்பு பூஜையில், கிராம மக்கள் கலந்து கொண்டு, அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரீஸ் வெற்றி பெற வேண்டிக் கொண்டனர்.

கமலா ஹாரீஸ் வெற்றி பெற்று, இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமே தேடி தர வேண்டும் என அவரது சொந்த கிராம மக்கள் விருப்பம் தெரிவித்தனர்.

துளசேந்திரபுரத்தில் கமலா ஹாரீஸை வாழ்த்தி சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே