பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் தேதி தள்ளிவைப்பு என தகவல்..!!

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் தேதி தள்ளிவைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த 8 மாதங்களாக பொது முடக்கம் அமலில் இருந்த நிலையில், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மெதுமெதுவாக இயல்புநிலை திரும்பி வருகிற நிலையில், பள்ளி கல்லூரிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இவர்களின் கேள்விக்கு பதிலாக, வரும் 16-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், 9-12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெறும் என கடந்த சில நாட்களுக்கு முன்பதாக அறிவிப்பு வெளியானது. 

தற்போது, கொரோனா பரவலின் தீவிரத்தால், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் தேதி தள்ளி வைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே