அதர்மம் எல்லா காலங்களிலும் நிலைத்து நிற்காது – டிடிவி தினகரன் தீபாவளி வாழ்த்து..!!

நாம் ஒவ்வொருவரும் புதிய நம்பிக்கையோடு எழுவோம் என்றும் நமது தமிழகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த மனித சமூகமும் பயன்பெறும் வகையில் வெல்வோம் என்றும், அத்தகைய வெற்றிகளை குவிக்கும் தீபஒளித் திருநாள் வழிகாட்டட்டும் என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது நாட்டில் எத்தனையோ பண்டிகைகளும், விழாக்களும் வந்து செல்கிறது.

அதை நாம் கொண்டாடினாலும், தீபாவளி என்பது மகிழ்ச்சியின் ஒரு அடையாளமாக திகழ்ந்து வருகிறது.

புத்தாடை, இனிப்பு, பட்டாசு என அதன் ஒவ்வொரு அம்சங்களிலும் நிறைந்திருக்கும் கொண்டாட்டமே அதற்குக் காரணம்.

‘அதர்மம் எல்லா காலங்களிலும் நிலைத்து நிற்காது; நிச்சயம் ஒருநாள் அகங்காரம் வீழ்ந்து தர்மம் தலையெடுத்தே தீரும்’ என்ற தத்துவத்தை உலகத்திற்கு போதிக்கும் நன்னாளாகவும் தீபாவளி அமைந்துள்ளது.

கொரோனா பேரிடரில் இருந்து நாம் மெல்ல மீண்டு வரும் நேரத்தில், மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கான தொடக்கமாக தீபாவளி அமையட்டும் என்றும், வீட்டிலும், நாட்டிலும் தீமைகள் எல்லாம் விலகி நன்மைகள் பெரும் வெளிச்சமாக பரவட்டும் என்றும்; ஒவ்வொரு வீட்டிலும் அன்பும், அமைதியும், ஆனந்தமும் நிறைந்திருக்கட்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே