பெட்ரோல் – டீசல் – கேஸ் விலை உயர்வு சரிதான்..; எச்.ராஜா விளக்கம்..!!

பெட்ரோல், டீசல், கேஸ் விலையேற்றம் செய்தது சரிதான். விலை ஏற்றம் காங்கிரஸ் ஆட்சியிலிருந்ததைவிட குறைவுதான், என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்.

கோவைக்கு வரும் பிரதமர் மோடியை வரவேற்பது தொடர்பாக ஈரோட்டில் பாஜக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: 4 முதல் 5 தினங்களுக்குள் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

இந்த தேர்தலில் தமிழக மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

தமிழகத்தில் கிஷான் சம்மான், ஆயுஸ் மான் பாரத் போன்ற பல்வேறு திட்டங்களை ஏழை, எளிய மக்களுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையேற்றம் செய்திருப்பது சரிதான். விலை ஏற்றம் காங்கிரஸ் ஆட்சியிலிருந்ததைவிட குறைவுதான்.

உணவுப்பொருட்களின் விலையேற்றமும் காங்கிரஸ் ஆட்சியிலிருந்ததைவிட குறைவுதான். காங்கிரஸ் ஆட்சியில் விலையேற்றம் 3.9 சதவீதமாக இருந்தது.

தற்போது பாஜக ஆட்சியில் விலை உயர்வு 2.6 சதவீதமாகத்தான் உள்ளது. ஆரியர் என்பதற்கு பண்பாளர், ஆசிரியர், உயர்ந்தவர் என்பதுதான் அர்த்தம். திருவள்ளுவர் உயர்ந்தவர் என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே