தமிழகத்தில் மேலும் 1,939 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,54,460-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.

அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,  

* தமிழகத்தில் மேலும் 1,939 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,54,460 ஆக அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 7,25,258 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 2,572 பேர் குணமடைந்துள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 11,454 ஆக உயர்ந்துள்ளது.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 512 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,07,686-பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை 1,09,37,407 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 73,486 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 208 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 17,748 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,55,647 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 1,193 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,98,780 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 746 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 33 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை.

* வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6,711 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே