தருமபுரி பாப்பிரெட்டிப்பட்டியில் டிடிவி தினகரன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கு இன்று முதல் விருப்ப மனு விநியோகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சென்னை அசோக் நகரில் உள்ள அமமுக அலுவலகத்தில் இன்று முதல் வரும் 10 ஆம் தேதிவரை விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விருப்ப மனுக்களை வரும் 10 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து அளிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தருமபுரி பாப்பிரெட்டிப்பட்டியில் போட்டியிட முதல் விருப்பமனுவை முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அளித்தார்.
விருப்பமனு பெற கட்டணமாக தமிழகம் 10,000 மற்றும் புதுச்சேரியில் 5000 ஆயிரம் வசூல் செய்யப்படுகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட பல்வேறு மாவட்டங்களியிருந்தும் அமமுக அலுவகத்திற்கு விருப்ப மனு வாங்கி செல்ல நிர்வாகிகள் வருகை தந்துள்ளனர்.