தமிழகத்தில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலை அடுத்து உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்போர் ஒப்படைக்குமாறு காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

உரிமம் பெற்று துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள், அவரவர் வசிப்பிடத்துக்கு உட்பட்ட காவல் நிலையங்களில், தங்களின் துப்பாக்கிகளை தேர்தல் தேதிக்கு முன்னதாக ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தீவிர கண்காணிப்பில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.

சரியான ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இதன் ஒருபொருட்டாக வன்முறை சம்பவங்களை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் உரிமம் பெற்று 2700 துப்பாக்கிகள் பயன்பாட்டில் இருப்பதாகவும் அவற்றில் 500 துப்பாக்கிகள் வங்கிகள் போன்ற நிறுவனங்களின் பாதுகாப்பிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் 600 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே