பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து பாமக வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை சென்னையில் நாளை மறுநாள் (05.03.2021) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் , பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து தெரிவிக்கவுள்ளனர். 

திமுக தேர்தல் அறிக்கை 11ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் பாமக தேர்தல் அறிக்கை 5இல் வெளியாகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே