குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராகக் கொந்தளிக்கும் திரிபுரா…

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக திரிபுராவின் கடுமையான போராட்டங்கள் நடந்து வருவதால் இணைய சேவை அப்பகுதிகளில் துண்டிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமைச் சட்ட மசோதா நேற்று இரவு மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.

மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மக்களைக் கட்டுப்படுத்தும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

திரிபுராவில் போராட்டங்கள் கட்டுக்கடங்காமல் நீடிப்பதால் இணைய சேவை மற்றும் மொபைல் எஸ்.எம்.எஸ் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

இன்று மதியம் 2 மணி முதல் தகவல் தொடர்பு சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. அடுத்த 48 மணி நேரத்துக்கு இது நீடிக்கும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

இதனால் திரிபுராவில் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், வங்கிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

பல இடங்களில் அரசு அலுவலகங்கள், கடைகள், பேருந்துகள் அடித்து உடைக்கப்பட்டு வருகின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே