ட்விட்டர் டிரெண்ட் பட்டியலில் இடம்பிடித்த விஜயின் “பிகில் போஸ்டர்”

ட்விட்டரில் இந்த ஆண்டு அதிக அளவில் ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட் என்று பிகில் படம் குறித்த விஜய்யின் ட்வீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அட்லீ இயக்கத்தில் வெளியான படம் பிகில். விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தத் திரைப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாராவும், அவர்களுடன் ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, ஆனந்தராஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டில் அதிகம் ரீ-ட்வீட் செய்யப்பட்ட பதிவாக நடிகர் விஜய்யின் பிகில் குறித்த பதிவு உள்ளது.

இதனை ட்விட்டர் நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட தலைப்பு, அதிகம் பகிரப்பட்ட பதிவு, ஹேஷ்டேக் உள்ளிட்ட பட்டியலை ட்விட்டர் வெளியிட்டுள்ளது.

குறிப்பாக தமிழிலேயே ஒரு பதிவை ட்விட்டர் வெளியிட்டுள்ளது.

அதில் “எப்போதும் போல் தமிழ் பொழுதுபோக்கு பிரகாசம் என்றும், மிகவும் மறுட்வீட் செய்யப்பட்ட ட்வீட் நடிகர் விஜய்யின் பிகில் பற்றிய இந்த ட்வீட் ” என்று குறிப்பிட்டுள்ளது.

ஜூன் மாதம் 21 ஆம் தேதி அன்று பிகில் போஸ்டரை நடிகர் விஜய் பகிர்ந்திருந்தார். அந்த டிவிட்டர் பதிவுக்கு 1 லட்சத்துக்கும் அதிகமானோர் ரீட்வீட் செய்திருந்தனர்.

இந்த ஆண்டு ட்விட்டரில் சினிமா பிரபலங்களின் பதிவுகளில் அதிகமாக ரீ-ட்வீட் செய்யப்பட்ட பதிவு இது என்று ட்விட்டர் குறிப்பிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே