நாளை முதல் ஷீரடி சாய்பாபா கோவில் மூடியிருக்கும் என்ற செய்தி உண்மையல்ல – நிர்வாக அதிகாரி திட்டவட்டம்!

மகாராஷ்டிர மாநிலம், அகமதுநகா் மாவட்டத்தில் அமைந்துள்ள ஷீரடியில் சாய்பாபாவுக்கு கோயில் உள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தா்கள் தினந்தோறும் வந்து தரிசனம் செய்து வருகின்றனா்.

சாய்பாபா பெரும்பாலான தனது காலத்தை கழித்தது ஷீரடியில்தான்.

அவா் எங்கு பிறந்தார் என்பது பற்றிய சரியான குறிப்புகளோ, தகவல்களோ  இல்லை. பலரும், பல விவரங்களை சொல்லி வருகின்றனர்.

பா்பனி மாவட்டம், பத்ரியில்தான் அவர் பிறந்தார் என்று பக்தா்களில் சிலா் நம்பி வருகின்றனா்.

இது சர்ச்சைகள் ஒருபக்கம் இருக்க, மகாராஷ்டிர முதலமைச்ச உத்தவ் தாக்கரே பத்ரியில் வளா்ச்சிப் பணிகளுக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார்.

அதன்பிறகு, சாய்பாபா எங்கு பிறந்தார், எந்த இடம் என்ற சர்ச்சை அதிகரித்தது.

சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் துரானி அப்துல்லா கான் கருத்து கூறி அந்த சர்ச்சையை அதிகப்படுத்தினார்.

பத்ரியில்தான் சாய்பாபா பிறந்தார். அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.  ஷீரடியைப் போன்று பத்ரியும் முக்கியமான இடம். ஆனால் பத்ரியில் சரியான வசதிகள் இல்லை. ஆகையால் பக்தர்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

எந்த இடம் என்பதில் பத்ரி, ஷீரடி இடையே போட்டி நிலவுகிறது. அதனால் பக்தர்கள் குழப்பம் அடைந்து வருகின்றனர் என்றார்.

தொடர்ந்து சர்ச்சை ஏற்பட்டு வரும் நிலையில், ஷீரடி சாய்பாபா பிறந்த இடம் பர்பனி மாவட்டம் பத்ரி என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கூறினார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஞாயிற்றுக்கிழமை முதல் காலவரையின்றி ஷீரடி சாய்பாபா கோயிலை மூட கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் ஷீரடியில் சாய்பாபா கோயில் மூடப்படும் என்று வெளியான தகவல்கள் உண்மையல்ல என்று கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ஷீரடி சாய்பாபா கோயிலின் தலைமை நிர்வாக அதிகாரி தீபக் முகலிகர் ஷீரடி சாய்பாபா கோவில் நாளை முதல் மூடி இருக்கும் என ஊடகங்களில் வரும் செய்தி தவறானவை, பரவும் செய்திகள் வெறும் வதந்தியே, 19 தேதி ஆன நாளை சீரடி சாய்பாபா கோவில் திறந்திருக்கும் வழக்கம் போலவே இங்கு அனைத்தும் இயங்கும் என தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே