தேனியில் மருத்துவமனை வளாகத்திலேயே மருத்துவக்கழிவுகள் எரிக்கப்படும் அவலம்

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலேயே மருத்துவ கழிவுகள் எரிக்கப்படும் சம்பவத்தால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தேனி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆண்டிபட்டி அருகே உள்ள காலங்கிளக்கில் அமைந்துள்ளது.

இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் கழிவுகள் வளாகத்தில் கொட்டப்பட்டு எரிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

இதனால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாவது மற்றும் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

எனவே மருத்துவக்கழிவுகளை எரிப்பதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதுகுறித்து அங்குள்ள மக்கள் தெரிவித்ததாவது, ஒட்டுமொத்தமாக தேனி மாவட்டத்தை சார்ந்திருக்கக்கூடியவர்களும், கேரள பகுதியில் இருக்கக்கூடிய மாவட்டத்தை சார்ந்தவர்களும் இந்த மருத்துவமனை மூலமாக பயன்பெற்று வருகின்றனர்.

அந்த மருத்துவக் கழுவுகளை உரிய முறையில் அரசு எரிக்காமல் மருத்துவமனை வளாகத்திலேயே எரிகின்றனர். இவ்வாறு விழிப்புணர்வு இல்லாமல் செயல்படுவதால் ஏராளமான வைரஸ்கள், தொற்றுகள் ஆகியவை மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை எளிதில் தாக்குவதுமின்றி அங்குள்ள பொதுமக்களுக்கும் பரவ கூடிய நிலை நீடித்து வருகிறது.

ஆதலால் அரசு உடனடியாக இதனை கருத்தில் கொண்டு மருத்துவக் கழிவுகளை வேறு இடங்களில் எரிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே