சேலத்தில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளை வீட்டுக்கு திருப்பி அனுப்பும் போலீசார்

சேலத்தில் ஹெல்மெட் அணியாமல் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை போலீசார் வீட்டுக்கு திருப்பி அனுப்பி வருகின்றனர்.

சேலத்தில் குறிப்பிட்ட சாலைகளில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர்.

இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டம் அமலில் உள்ள நிலையில், விதிகளை மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சேலத்தில் கட்டாய ஹெல்மெட் தொடர்பாக தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து காவல் துறையினர் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். 

இதன் ஒருபகுதியாக பெரியார் சாலை, அன்னதானபட்டி, தமிழ் சங்க சாலை, சுந்தர்லாட்ஜ் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் ஹெல்மெட் அணியாமல் பைக்குகளை இயக்க தடை விதித்து, போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

இந்த சாலையில் ஹெல்மெட் அணியாமல் செல்ல அனுமதி மறுப்பதோடு, அப்படி வருவோரை தனியாக அழைத்து போலீசார் அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.

மேலும் கட்டாய ஹெல்மெட் விவகாரத்தில் பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே