பிகில் படத்தின் டிரைலருக்கு விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதுபற்றிய விவரங்களை இனி பார்க்கலாம்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான திகில் படத்தின் டிரைலர் விஜய் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.
கால்பந்து பயிற்சியாளராக ஒரு கதாபாத்திரத்தில் விஜய் வலம்வர, முதன்முறையாக வயதான கெட்டப்பில் தோன்றி மற்றொரு விஜய் மாஸ் காட்டுகிறார்.
அதோடு போக்கிரி, தலைவா, சர்க்கார், கத்தி போன்ற படங்களில் விஜய் நடித்த ஒரு சில காட்சிகள் இந்த படத்தில் குறியீடுகளாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
கையை உயர்த்தி மக்களுக்கு கையசைப்பது, சண்டை காட்சியின்போது BUBBLEGUM – ஐ ஸ்டைலாக வாயில் போடுவது போன்ற காட்சிகள் அவரது முந்தைய படங்களை நினைவுக்குக் கொண்டு வருகின்றன.
கூடவே ஏ ஆர் ரகுமானின் பிரம்மாண்ட பின்னணி இசையுடன் மிரட்டலான காட்சிகளோடு வெளியான ட்ரைலருக்கு விஜயின் ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
பிகில் படம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன், இதுவரையிலான box-office ரெக்கார்டுகளை இப்படம் தகர்த்தெறிய வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.
பிகில் படம் சக் தே இந்தியாவை போல் உள்ளதாக பலரும் விமர்சித்து வந்தனர்.
ஆனால் அப்படத்தில் நடித்த ஷாருக்கானே பிகில் ட்ரெய்லரை சிலாகித்து ட்விட் செய்துள்ளார்.
மிக அற்புதமான ட்ரெய்லர் இது என பாராட்டியுள்ளார் மற்றொரு பாலிவுட் நடிகர் வருண் தவான்.
சிவகார்த்திகேயன் மாஸான ட்ரெய்லர் என்றும், ஆர்யா, சமந்தா, எஸ் ஜே சூர்யா ஆகியோர் வெறித்தனம் என்றும் பிகில் ட்ரைலரை புகழ்ந்துள்ளனர்.
மேலும் விஷ்ணு விஷால், சாந்தனு, அசோக்செல்வன், மஞ்சிமா மோகன், கரன் ஜோகர் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் பிகில் பட ட்ரைலருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
அத்துடன் ட்ரெய்லர் வெளியான சில மணி நேரங்களிலேயே உலக அளவில் ட்ரெண்டிங் செய்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் விஜய் ரசிகர்கள்.