பள்ளிகளில் கொசு உற்பத்தியை தடுக்க பள்ளிக்கல்வி இயக்ககம் அறிவுறுத்தல்

தமிழக பள்ளிகள் மற்றும் சுற்றுப்புறங்களில் கொசு உற்பத்தியை தடுக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

பள்ளி மாணவ மாணவிகளுக்கு காய்ச்சல் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தர்மபுரி, திருவள்ளூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்ட பள்ளிகளில் சில மாணவ-மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மருத்துவ கூறுகளின் ஆய்வில், சிமெண்ட் தொட்டிகள், வாளிகள், கழிவறைத்தொட்டி, சின்டக்ஸ் தொட்டி, கட்டுமானப் பகுதிகள், பழைய பொருட்கள் வைக்கப்பட்ட பகுதிகளில் கொசு உற்பத்தி ஆகுது தெரியவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பள்ளிகளின் உட்புறம் மற்றும் சுற்றுப்புறங்களில் கொசு உற்பத்தியாகாமல் இருப்பதை தலைமையாசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், உள்ளாட்சி அமைப்புகள் சுகாதார பணியாளர்களுக்கு கல்வித்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு அளித்து இதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பள்ளி மற்றும் சுற்றுப்புறங்களில் கொசு உற்பத்தி ஆகாமல் தடுக்க மாவட்ட கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும் பள்ளி கல்வி துறை இயக்குனர் அவர்கள் அதில் வலியுறுத்தி உள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே