இஸ்ரோ தலைவர் சிவனுக்கு பயணிகள் உற்சாக வரவேற்பு

சந்திராயன்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கு, இஸ்ரோ தலைவர் சிவன் தலைமையிலான குழு பெருமளவு தங்களது அர்ப்பணிப்பை சமர்பித்தது.

சந்திராயன்-2 வின் விக்ரம் லேண்டர் தோல்வி அடைந்தாலும், அதற்காக உழைத்த சிவன் மற்றும் அவரது குழுவிற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த, சிவனைப் பார்த்த விமான பணிப்பெண்கள் அவருக்கு கைகொடுத்து பாராட்டுகள் தெரிவித்ததோடு செல்பி எடுத்துக் கொண்டனர்.

அதேபோல் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இஸ்ரோ தலைவர் சிவனை கைத்தட்டி வரவேற்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே