திருப்பதி பிரமோற்சவம் பத்ரி நாராயணன் அலங்காரத்தில் உலா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இதையொட்டி மலையப்பசுவாமி தினமும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

இந்த வைபவத்தின் 7ஆம் நாளான இன்று, தங்க சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீபத்ரி நாராயணன் அவதாரத்தில் மாட வீதிகளில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது.

ஏழு குதிரைகள் பூட்டியது போன்ற ரதத்தில், சூரியனுக்கு சாரதியாக, மலையப்ப சுவாமி ஸ்ரீபத்ரி நாராயணன் அலங்காரத்தில் சிவப்பு மாலை அணிந்து வந்து, சூரியபகவனின் பிரத்தி ரூபம் தானே என்பதை எடுத்துக்கூறும் விதமாக இந்த வைபவம் நடத்தப்படுவதாக ஐதீகம் கூறப்படுகிறது.

இதில் தமிழ்நாடு, ஆந்திர, கர்நாடாக, கேரள, மணிப்பூர், ஒடிசா, ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், மஹாராஷ்டிர மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் கோலாட்டம், தப்பட்டத்துடன் பஜனைகள் மற்றும் சுவாமி போல் பல்வேறு அலங்காரத்தில் அணிவகுத்து வந்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே