சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும் நிகழ்வான சந்திர கிரகணம் இன்றிரவு ஏற்படுகிறது.

முழுமையான அளவு, பாதி மற்றும் பெனும்ப்ரல் வகை என 3 வகையான சந்திர கிரகணங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இதில் இன்றைய சந்திர கிரகணம் பெனும்ப்ரல் வகையிலானது ஆகும்.

இந்த கிரகண காலத்தில் சந்திரன் முற்றிலும் இருளாகவோ அல்லது சிவப்பாகவோ மாறாது என்பதால் இதற்கு ஓநாய் சந்திர கிரகணம் என பெயர் சூட்டியுள்ளது நாசா.

இதேபோல் இந்த ஆண்டில் 4 சந்திர கிரகணம் நிகழ இருப்பதாகவும் நாசா கூறியுள்ளது.

இதை இந்தியா மட்டுமின்றி, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் கிழக்குப் பகுதி, அட்லாண்டிக், ஆர்டிக் பகுதிகளில் வெறும் கண்களாலேயே பார்க்க முடியும் என நாசா அறிவித்துள்ளது.

இன்று இரவு 10.37 மணிக்கு தொடங்கும் இந்த சந்திர கிரகணம், நாளை அதிகாலை 2.42 மணி வரை அதாவது சுமார் 4 மணி நேரம் நீடிக்கும் என்றும்; 12.41 மணியளவில் சந்திர கிரகணம் முழுமையான அளவை எட்டும் என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதாவது பூமியின் நிழல் மிகவும் குறைவான அளவு மட்டுமே, சந்திரனில் விழும். இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவில் அனைத்து பகுதி மக்களும் வெறும் கண்ணால் பார்க்க முடியும்.

இந்த ஆண்டில் ஜூன் 5, ஜூலை 5 மற்றும் நவம்பர் 30 ஆகிய நாட்களிலும் சந்திர கிரகணம் நிகழும் என கூறப்பட்டு உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே