கல்யாண போட்டோஷூட் ஆர்வத்தால் நேர்ந்த சோகம்..!!

திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட் எடுக்கச் சென்ற ஜோடி காவிரி ஆற்றில் விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மைசூரைச் சேர்ந்த சந்துரு-சசிகலா ஜோடிக்கு, நவம்பர் 22-ம் தேதி திருமணம் நடத்த இருவீட்டாரும் நிச்சயித்துள்ளனர். எனவே ஜோடியாக இருவரும் திருணத்திற்கு முந்தைய போட்டோஷூட் எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.

மைசூரு அரண்மனை, காவிரி நதி, மற்றும் சில இடங்களில் புகைப்படக் கலைஞர்களுடன் செல்ல மணமக்கள் விரும்பியுள்ளனர்.

சந்துரு-சசிகலா

அதன்படி, மைசூரு அரண்மனையில் புகைப்படங்களை எடுத்துக் கொண்ட பின், தாலக்காடு பகுதியில் காவிரி நதியில் புகைப்படங்கள் எடுக்கச் சென்றுள்ளனர். அங்கு ஒரு பவளப்பாறை மீது ஏறி நின்று புகைப்படங்கள் எடுக்க முடிவு செய்துள்ளனர்.

சந்துரு பாறை மீது ஏறி நின்றுகொள்ள, சசிகலா ஏற முற்பட்டுள்ளார். ஆனால், அவர் உயரமான காலணி அணிந்திருந்ததால் தடுமாறியுள்ளார். அவரை சந்துரு பிடிக்க முயலும் போது இருவரும் ஆற்றில் விழுந்துள்ளனர்.

ஆற்றில் வெள்ளம் அதிகமாக இருந்ததால், இருவரும் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர். 4 மணி நேரத்திற்குப் பின் இருவரையும் சடலமாகவே மீட்க முடிந்துள்ளது.

திருமணத்திற்குத் தயாரான ஜோடி புகைப்பட ஆசையால் உயிரிழந்த சம்பவம் இரு குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே