பானி பூரியில் புழு – வடமாநில இளைஞரை கட்டிவைத்து தர்மஅடி!!

சென்னை அம்பத்தூரில் பானிபூரி கிழங்கில் புழு இருந்ததால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பானிபூரி விற்ற வடமாநிலத்தவரை கட்டி வைத்து தர்மஅடி கொடுத்தனர்.

பட்டரைவாக்கம் பகுதி வழியே சென்ற இளைஞர்கள் அங்கு வண்டியில் பானிபூரி வாங்கி சாப்பிட்டனர். அப்போது பசியின் காரணமாக வட மாநிலத்தவர் பானிபூரி தயார் செய்து தருவதற்கு முன்பு இளைஞர்கள் தாங்களே உருளைக்கிழங்கை எடுத்து பானிபூரியில் வைத்து சாப்பிட ஆரம்பித்தனர்.

அப்போது உருளைக்கிழங்கில் துர்நாற்றம் வீசியதை இளைஞர்கள் கண்டுபிடித்தனர். அதை சோதனை செய்தபோது அதில் புழு இருந்தது தெரியவந்தது.

அந்த உருளைக்கிழங்கை வேகவைத்து பல நாட்கள் ஆனதும், கெட்டுப்போகாமல் இருக்க உருளைக்கிழங்கை சூடு செய்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பானிபூரி விற்ற வடமாநிலத்தவரை கட்டி வைத்து உதைத்தனர்.

இதைத் தொடர்ந்து அவரை அழைத்துக்கொண்டு பானிபூரி தயார் செய்யும் வீட்டிற்குச் சென்ற அப்பகுதி மக்கள் முதலாளி மற்றும் இருவரை பிடித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே