தனது வீட்டில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை..!!

எஸ்.ஏ.சந்திரசேகர் தனி கட்சி ஆரம்பித்துள்ள நிலையில், இன்று தன்னுடைய மக்கள் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் பனையூரில் நடிகர் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டு வரும் நிலையில் கரூர், திருச்சி, பெரம்பலூர் என 30 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

சமீபத்தில் மக்கள் இயக்கத்தின் மாணவரணி, இளைஞரணி, தொண்டரணியுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

கொரோனா காலத்தில் வீட்டிலேயே இருந்த விஜய் ரசிகர்களை சந்தித்தார். இதில் அதேபோல் கன்னியாகுமரி ,கடலூர்,ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற கட்சியை தொடங்கி உள்ளார். இந்த கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ;ரசிகர்கள் அந்த கட்சியில் இணைய வேண்டாம் என விஜய் அதிரடியாக உத்தரவிட்டார். இதனால் தந்தை -மகன் இடையே பனிப்போர் மூண்டுள்ளது. இந்த சூழலில் விஜய் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்துள்ளது பேசும் பொருளாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே