இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 7வது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடருகின்றன.

சென்செக்ஸ் 300, நிப்டி 80 புள்ளிகளுக்கும் அதிகமாக ஏற்றத்துடன் காணப்படுகின்றன.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 228 புள்ளிகளும், நிப்டி 62 புள்ளிகள் உயர்வுடன் ஆரம்பமாகின.

தொடர்ந்து ஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள் காலை 10.40 மணியளவில் சென்செக்ஸ் 369.45 புள்ளிகள் உயர்ந்து 42,966.89ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 96 புள்ளிகள் உயர்ந்து 12,557.65ஆகவும் வர்த்தகமாகின.

கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பு தொடர்பான ஆய்வில் மிகச் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்காவைச் சேர்ந்த, பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்பயனாக உலகளவில் ஒரு பெரிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இதன் தாக்கம் பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது.

அமெரிக்க பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்ததை தொடர்ந்து, ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றத்தாலும், ரூபாயின் மதிப்பு உயர்வு மற்றும் முன்னணி நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டதால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து ரூ.74.12ஆக வர்த்தகமானது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே