ஊரடங்கையும் மீறி சென்னை பாடி மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல்

சென்னை பாடி மேம்பாலத்தில் கரோனா ஊரடங்கு உத்தரவை மீறி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழக அரசு முதலில் மார்ச் 31 (நேற்று) வரை மட்டுமே ஊரடங்கு என அறிவித்தது. அதன் பிறகு தான் மத்திய அரசு 21நாள் ஊரடங்கு அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் இன்று தமிழகத்தில் தலை நகர் சென்னை, பாடி பகுதியில் உள்ள மேம்பாலத்தில் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் என பல குவிந்த வண்ணம் உள்ளது.

மேலும் அந்த வாகன ஓட்டிகள் மிக நெருக்கமாக நின்று கொண்டிருந்தனர்.

அரசு, வைரஸ் தொற்றாமல் இருக்க மக்கள் நலனுக்காக சமூக விலகலை பின்பற்றி கோரியும் சிலர் இவ்வாறு பின்பற்றாமல் இருப்பது மிகவும் ஆபத்தானது.

மேம்பாலத்தின் 3 புறமும் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஊரடங்கு உத்தரவு மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் வாகனங்கள் வரிசை கட்டி நிற்பதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே