தமிழகத்தின் புதிய மாவட்டமாக தென்காசி இன்று உதயம்

புதியதாக தோற்றுவிக்கப்பட்ட 5 மாவட்டங்களில் முதல் மாவட்டமாக நெல்லையில் இருந்து பிரிந்து தென்காசி இன்று தொடங்கி வைக்கப்படுகிறது.

தென்காசியில் இன்று காலை ஒன்பதரை மணிக்கு நடைபெறும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

அதோடு 100 கோடி ரூபாய் மதிப்பில் 5 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

இதற்காக 7 ஆயிரத்து 509 பேர் அமரக்கூடிய வகையில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் வருகையை ஒட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நெல்லை ஆலங்குளத்தில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் ஆசாத் நகரில் நிறுத்தப்படும்.

மதுரை ராஜபாளையம், புளியங்குடி மார்க்கமாக வரும் வாகனங்கள் புதிய பேருந்து நிலையத்துடன் நிறுத்தப்படும்.

புதியதாக அமையும் தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வீரகேரளம்புதூர், சங்கரன்கோவில், திருவேங்கடம், ஆலங்குளம் என எட்டு தாலுகாக்கள் இடம்பெறுகின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே