தற்போதைய காலகட்டத்தில் ஆன்டிபயாடிக் மருந்துகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மருந்துகளை, மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மிகவும் கவனக் குறைவாக, எடுத்துக் கொள்ளும் பலரை பார்க்கலாம்.
அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். சளி, காய்ச்சல், இருமல் போன்றவற்றில் மருத்துவரின் ஆலோசனையின்றி ஆண்டிபயாடிக்குகளை உபயோகிப்பது மிகவும் ஆபத்து. சமீபத்தில், நடைபெற்ற ஒரு சம்பவம் ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கும்.
வாழ்க்கையை அழித்த ஆண்டிபயாடிக்
அலெக்ஸ் மிடில்டன் என்ற நபர் அளவுக்கு அதிகமான ஆண்டிபயாடிக் மருந்தை உட்கொண்டதன் காரணமாக அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இன்றைக்கு யாருடைய ஆதரவும் இல்லாமல் வாழ்க்கையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உடல் எடை மிக வேகமாக குறையத் தொடங்கியது.
அதிக அளவு ஆண்டிபயாடிக்குகள் ஆபத்தானவை
26 வயதான அலெக்ஸ் மிடில்டனுக்கு ஆபத்தான தொற்று ஏற்பட்ட நிலையில், மருத்துவர் அவருக்கு ஆண்டி பயாடிக்கை வழங்கினார். அலெக்ஸ் ஏற்கனவே மருத்துவரை ஆலோசிக்காமல் ஆண்டி பயாடிக்குகள் எடுத்து வந்த நிலையில், மருத்துவர் கொடுத்த ஆண்டிபயாடிக்கும் சாப்பிடத் தொடங்கினார். அதனால், 2 நாட்களுக்குப் பிறகு பக்க விளைவுகள் தோன்றத் தொடங்கின. முன்பு மிகவும் ஆரோக்கியமாக இருந்த அலெக்ஸ் இப்போது நடக்கக்கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவருக்கு மூட்டு வலியும் தொடங்கியது.
அலெக்ஸ் மிடில்டன் (புகைப்படம்: Grimsby Telegraph/MEN Media)
வலியில் கழியும் வாழ்க்கை
அலெக்ஸ் மிடில்டனின் தாய் மிச்செல் இது குறித்து கூறுகையில், தனது மகன் எப்போதும் வலியால் அவதிப்படுகிறான். ஆனால் அவனால் வலி நிவாரணிகளை உட்கொள்ள முடியவில்லை. ஏனென்றால், மருந்தினால் ஏற்படும் பக்க விளைவுகளால் வேறொரு பிரச்சனை வருகிறது என வேதனையுடன் கூறினார். ஆண்டிபயாடிக்குகளை உட்கொண்ட பிறகு அலெக்ஸின் எடையும் வேகமாகக் குறையத் தொடங்கியது என்றும் மிச்செல் கூறினார்.
அலெக்ஸ் குணமடைய பிரார்த்தனை
MRI ஸ்கேன் மூலம், அலெக்ஸின் உடலில் அசாதாரணமாக பெரிய செலியாக் தமனி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். அதற்கான பரிசோதனையும் நடந்து வருகிறது. ஆனால் அதற்கு சிகிச்சை அளிப்பதற்கான வழி இன்னும் தெரியவில்லை. அலெக்ஸின் தாய் தன் மகன் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகிறார்.