நாளை மாஸ்டர் அப்டேட் – தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு..!!

விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் மிகப்பெரிய ரிலீஸ் அப்டேட் நாளை மதியம் 12.30 மணிக்கு வெளியாகும் என்று மாஸ்டர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் எக்ஸ்.பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் 22-ஆம் தேதி முதல் கொரோனா ஊரடங்கின்போது தியேட்டர்கள் மூடப்பட்டன. ஊரடங்கை கொஞ்சம் கொஞ்சமாக தமிழக அரசு தளர்த்திவந்தபோது கடந்த நவம்பர் 10-ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

இதனால், மாஸ்டர் படம் பொங்கலுக்கு வெளியாகும் எனக் கூறப்பட்டது. இதனிடையே திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்குமாறு முதல்வரிடம் விஜய் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தாக தகவல் வெளியானது.

இந்நிலையில், மாஸ்டர் வரும் ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என்று தெரிவித்தார் தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம்.

இந்நிலையில், மாஸ்டர் படத்தை தயாரிக்கும் எக்ஸ்.பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் நாளை 12.30 மணிக்கு மாஸ்டர் படத்தின் மிகப்பெரிய அறிவிப்பு வெளியாகும் என்று வீடியோவுடன் தெரிவித்துள்ளது.

என்ன நண்பா ரெடியா? என்று வெறிச்சோடிய திரையரங்குகளை காட்டி திடீரென மாஸ்டர் விஜய் கட் அவுட்டுகளுடன் ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் திரையரங்குகளில் மாஸ்டர் படத்தை கண்டு களித்து கொண்டாடும் வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே