தற்கொலை செய்ய நினைத்து 3வது மாடியில் இருந்து குதித்த பீட்டர் பால்.

வனிதா விஜயகுமார் தன் கணவர் பீட்டர் பாலை பேட்டி எடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். பீட்டர் பால் கேமராவுக்கு முன்பு வர மாட்டாரா என்று பலரும் கேட்ட நிலையில் வனிதா இந்த பேட்டியை எடுத்துள்ளார்.

பேட்டியில் வனிதா மற்றும் பீட்டர் பால் கூறியதாவது,
பீட்டர் பால் யார், எங்கு பிறந்து வளர்ந்தீர்கள், என்ன படித்தீர்கள் என்று வனிதா கேட்டார். அதற்கு பீட்டரோ, நான் காரைக்குடிக்காரன். சென்னையில் படித்தேன். நானே தான் சினிமா துறைக்கு வந்தேன். படிப்பை முடிக்கும் முன்பே பிரசாத் ஸ்டுடியோஸில் வேலை கிடைத்தது. நான் ஆயிரத்து 500 படங்களுக்கு மேல் வேலை செய்திருக்கிறேன்.

ஹாலிவுட் படங்களிலும் வேலை செய்திருக்கிறேன். நான் இயக்குநராகும் ஆசையில் தான் அனைத்தையும் செய்தேன். அந்த நேரத்தில் தான் உன்னை சந்தித்தேன். எனக்கு 4 வயது இருந்தபோது அப்பா இறந்துவிட்டார். அப்பாவின் முதல் மனைவிக்கு பிறந்தவர்கள் எங்கள் பெரிய அண்ணன், அக்கா. எங்க அம்மாவுக்கு அண்ணன், அக்கா, நான் இருக்கிறோம்.

நான் சினிமா பின்னணி இல்லாமல் வந்தேன். என் முதல் திருமணம் பெரியவர்கள் பார்த்து செய்து வைத்தது. எலிசபெத் ஹெலன் என் அண்ணியின் கசின். என் அண்ணன் கல்யாணத்தின்போது பார்த்தோம். 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது. முதல் வருடம் என் பையன் ஜான் எட்வர்டு பிறந்தார். 2005ம் ஆண்டு வரை எல்லாம் நல்லபடியாக சென்றது.

எதற்கெடுத்தாலும் அம்மா வீடு என்று இருந்தார். ஹெலன் என்னை என் குடும்பத்திடம் இருந்து பிரிக்க நினைத்தார். நான் பொறுமையான ஆளு, கோபமே வராது. எனக்கு குடிப்பழக்கம் இல்லை. வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றால் 4 பேர் பஞ்சாயத்து நடத்துவார்கள். நான் ஹெலனை ராணி மாதிரி வைத்திருந்தேன். எங்களுக்கு இடையே அன்னோன்யம் இல்லாமல் இருந்தது.
அப்படியே நாளுக்கு நாள் பிரச்சனை வளர்ந்தது. இதனால் என்னால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. சொந்தமாக ஸ்டுடியோ துவங்கினேன். என்னை பொம்ள பொறுக்கினு சொல்வது எனக்கே சிரிப்பு, சிரிப்பா வருது. அவருக்கு என் மீது சந்தேகம். நான் துவங்கிய ஸ்டுடியோவை மூட வேண்டிய நிலை வந்தபோது என் மனைவி எனக்கு ஆறுதலாக இல்லாமல் காசு தான் வேணும் என்றார்.

அந்த நேரத்தில் தூக்கம் வராமல் மது அருந்தினேன். என்னை மறுவாழ்வு மையத்தில் எல்லாம் சேர்க்கவில்லை. அந்த நேரத்தில் நான் அம்மா வீட்டிற்கு சென்றேன். அப்பொழுது நான் மன அழுத்தத்தில் இருந்தேன். தற்கொலை செய்ய நினைத்து 3வது மாடியில் இருந்து குதித்ததில் ஏற்பட்டது தான் என் உடம்பில் ஏற்பட்ட காயம். மாடியில் இருந்து குதித்ததில் 45 இடத்தில் தையல் போட்டிருந்தார்கள். என்னால் தூங்க முடியாது, சாப்பிட முடியாது. அந்த நேரத்தில் கூட ஹெலன் வந்து பார்க்கவில்லை.

நீ எனக்கு வேண்டாம் என்றார். அதன் பிறகு சேர்ந்து வாழ நான் என்ன மானம் கெட்டவனா?. நானும், ஹெலனும் பிரிய ஒரு காரணம் இருக்கு. அதை வெளிப்படையாக சொல்ல விரும்பவில்லை. ஒருத்தன் சாகக் கிடக்கிறான், அந்த நேரத்தில் கூட எட்டிப்பார்க்க வராத ஒரு பொம்பள, பொம்பளயா?.
2013ம் ஆண்டு அவர் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். 7 ஆண்டுகளாக நாங்கள் பேசவில்லை. 2014ம் ஆண்டு என் மகளை பார்க்க அவர் வீட்டிற்கு சென்று ராத்திரி முழுக்க வாசலில் நின்றேன். என் மகளை என் கண்ணில் காட்டவில்லை.

என் மகனுடன் பேச வேண்டும் என்று நான் ஆசைப்பட்டு செல்போன் வாங்கிக் கொடுத்தேன். என் குழந்தைகளுக்கு தேவையானதை எல்லாம் நான் செய்தேன் என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே