சத்தீஸ்கரில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் தக்காளி இலவசம்..!!

சத்தீஸ்கரில் கொரோனா தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் விதமாக மக்களுக்கு தக்காளி இலவசமாக வழங்கப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி பற்றிய வதந்திகளால் வடமாநில மக்கள் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டவில்லை.

இந்நிலையில் பிஜாப்பூரில் உள்ள கொரோனா தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு இரண்டு கிலோ தக்காளி வழங்கப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி போடுவதை ஊக்குவிப்பதற்காக மொத்த காய்கறி விற்பனையாளர்களிடமிருந்து தக்காளியை வாங்கி, மக்களுக்கு வழங்குவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே